தமிழ்நாட்டில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால் பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு ஒரு மர்ம போனில் மாகாத்மா மேல்நிலைப்பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அந்த இணைப்பை துண்டித்துள்ளனராம்.
இந்த தகவலை சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து மதுரை பொலிஸ் கொமிஷனர் சஞ்சய் மாத்தூருக்கு சொல்லியுள்ளனர். இதேபோல் மதுரை பொலிஸ் கொமிஷனர் அலுவலகத்துக்கும் மிரட்டல் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மதுரை கொமிஷனர் சஞ்சய் மாத்தூர், எஸ்.பி. பாலகிருஷ்ணன், ஐந்து உதவி கொமிஷனர்கள், 50க்கும் மேற்பட்ட பொலிசார் பள்ளியில் சோதனை நடத்தியுள்ளனர்.
இரவு 7.30 மணி முதல் பள்ளியில் வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா என பள்ளி முழுவதும் சோதனை செய்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வண்டிகள், தீயணைப்பு வண்டிகள் என பள்ளியில் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.
5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளியில் முழு சோதனை நடத்திய பின்னரே பள்ளியில் நுழைய அனுமதி அளிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரத்தில் நடந்த இந்த சோதனையால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment