Search This Blog n

01 July 2013

நடனமாடிய இரு இளம்பெண்கள் சுட்டுக் கொலை


மழையை கண்ட சந்தோசத்தில் துள்ளி  ஆடிய இரு சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் வெறித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த வெறிச் செயலானது பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெலிதான தூரல் மழைக்கு இடையில் பாகிஸ்தானின் சிலாஸ் பகுதியை சேர்ந்த 16 வயதான நூர் ஷேசா மற்றும் 15 வயதான நூர் பஸ்ரா ஆகிய சகோதரிகள் சில சிறுவர்-சிறுமிகளுடன் துள்ளி நடனமாடும் காட்சி சமீபத்தில் இணையதளங்களில் உலா வந்தன.
உலகெங்கிலும் வாழும் ஆயிரக் கணக்கானோர் இந்த படப்பதிவை கண்டு மகிழ்ந்த நிலையில், இவர்களின் வீட்டுக்கு வந்த 5 பேர் காட்டு மிராண்டித் தனமாக அந்த பெண்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர்.
அத்துடன், அவர்களின் தாயார் நோஷரா என்பவரையும் ஈவிரக்கமற்ற அந்த பழமைவாத கும்பல் சுட்டுக் கொன்றது.
குடும்ப கவுரவத்தை குலைத்ததாக கருதிய தனது பங்காளிதான் கூலிப்படையை ஏவி தங்கைகளையும், தாயையும் சுட்டுக் கொன்றதாக பலியான பெண்களின் அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளதனால், தலைமறைவாக இருக்கும் குத்தோர் என்ற பழமைவாதியையும் அத்துடன், இந்த படுகொலையை செய்த 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்
 

0 கருத்துகள்:

Post a Comment