எனது தலைமையிலான மேற்கு வங்காள மாநில அரசை கலைக்க மத்திய அரசு சதி செய்து வருகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மாநில பட்ஜெட்டை நிறைவேற்ற நேற்று மேற்கு வங்காள மாநில சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
எனது தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் டார்ஜீலிங் மலைப் பகுதியிலும், மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த ஜங்கிள்மகால் பகுதியிலும் அமைதி நிலவி வருகிறது.
இந்த அமைதியை சீர்குலைக்கவும் மாநில அரசின் நடவடிக்கைகளில் தடையை ஏற்படுத்தவும் மத்திய அரசு தனது ஏஜென்சிகளின் மூலம் முயற்சித்து வருகிறது.
கடந்த கால ஆட்சியின்போது 2003ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் கலவரங்களில் 40 பேர் பலியாகினர். 2008 உள்ளாட்சி தேர்தலில் 35 பேர் பலியாகினர். தற்போது நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
கள்ள ஓட்டு சம்பவங்கள் ஏதுமின்றி ஜனநாயக முறையில் தற்போதைய தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
முந்தைய ஆட்சியின் போது மாநிலத்தின் வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்கள் தற்போதைய தேர்தல் வன்முறையைப் பற்றி அழுது புலம்புகின்றனர். அவர்களுடன் சேர்ந்துக்கொண்டு எனது தலைமையிலான மாநில அரசை கலைக்க மத்திய அரசு சதி செய்து வருகிறது.
0 கருத்துகள்:
Post a Comment