காதல் திருமணம் செய்த கணவரை சேர்த்து வைக்க கோரி பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்கோட்டை அருகே உள்ள அருவங்காட்டையை சேர்ந்த காமராஜ் மகள் செல்வி(வயது 27).
சேலம் மாவட்டம் முக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் சரவணன்(வயது 30).
அருவங்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சரவணன் சென்ற போது, செல்வியுடன் காதல் ஏற்பட்டது.
இருவரும் 2008ம் ஆண்டு ஜனவரி 18ல் திருமணம் செய்து சங்கராபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தனர்.
சென்னை தனியார் நிறுவனத்தில் பணி செய்த சரவணன், 2010ம் ஆண்டில் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளையும் விட்டு பிரிந்து சென்று விட்டார்.
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது சிவகங்கை வேம்பத்தூர் வி.ஏ.ஓ., வாக உள்ளார்.
இந்நிலையில் மனைவி செல்வி ஜீவனாம்சம் கேட்டு சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையே நேற்று மாலை 6.30 மணிக்கு, சிவகங்கை ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு குழந்தைகளுடன் வந்த செல்வி கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார்.
மாவட்ட அலுவலர் சிதம்பரம், வி.ஏ.ஓ சரவணனை வரவழைத்து இருவரிடமும் விசாரித்தார். பின் இருவரும் மகளிர் பொலிசில் ஒப்படைக்கப்பட்டனர்.
வி.ஏ.ஓ., சரவணன் கூறுகையில், நான் செல்வியை திருமணம் செய்யவில்லை. அவர் என்மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இப்பிரச்னையை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment