திம்பம் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்புச் சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் இந்த வழியாக செல்லும் பேருந்து பயணிகள் பயத்தில் உள்ளனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்ட இந்த பகுதிக்கு செல்ல பண்ணாரியில் இருந்து 27 கொண்டை ஊசி வளைவுகள் கடந்து செல்லவேண்டும். இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை 209 என்பதால் இந்த வழியாக போக்குவரத்து அதிகமாக உள்ளது.
இதில் 6,8,9,20,27 உள்ளிட்ட கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் ஆபத்தானவை. கொண்டை ஊசி வளைவுகளின் ஓரத்தில் பள்ளம் என்பதால் தேசிய நெடுஞ்சசாலை திம்பம் மலைப்பாதையில் இரு பக்கமும் தடுப்பு சுவர் கட்டி வைத்துள்ளனர். ஆனால் இந்த தடுப்பு சுவரை அவ்வப்போது வாகனங்கள் திரும்ப முடியாமல் மோதி இடித்து விடுகின்றனர்.
இடிக்கப்பட்ட இந்த தடுப்பு சுவர்களை தேசிய நெடுஞ்சாலை துறை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை. பேருந்துகள் இந்த வளைவுகளில் திரும்பும்போது சாலையின் எல்லைவரை செசன்று வருவதால் பஸ் பயணிகள் பயந்து விடுகின்றனர்.
தற்போது 9 மற்றும் 24 வது கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை இடிந்த சுவரை கட்டவில்லை. இதனால் இந்த கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் திரும்பும்போது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த இரு வளைவுகளின் கீழ் ஆயிரம் அடி பள்ளம் இருப்பதால் தடுப்பு சுவர் இல்லாமல் விபத்து ஏற்பட்டால் கட்டாயம் உயிர் சேசதம் ஏற்படும் ஆபத்து உள்ளது.
ஆகவே தேசிய நெடுஞ்சசாலை துறையினர் உடனே திம்பம் கொண்டை ஊசி வளைவுகளில் இடிந்துள்ள தடுப்பு சுவர்களை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்
0 கருத்துகள்:
Post a Comment