புதுடெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் உறவினர் மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் உறவினரான அர்விந்த் சிங் இவர் வாரணாசியில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார்.இவர் வாரணாசியில் வசித்து வருகிறார் சம்பவத்தன்று மனைவியை விமான நிலையத்தில் விட்டு வீட்டிற்கு திரும்பி
வந்து கொண்டிருக்கும் போது மறைந்திருந்த 3 மர்ம நபர்கள் அர்விந்த் சிங்க்கை கழுத்து பகுதி மற்றும் பிற பகுதியில் சரமாரியாக சுட்டு விட்டு காரில் வேகமாக தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவ இடத்திலேயே அர்விந்த் சிங் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் அரவிந்த் சிங்கை உடலை பிரதேச பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து யாரையும் போலீசார் கைது செய்யவில்லை.தப்பி ஓடிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment