Search This Blog n

04 April 2015

வழக்கில் மேலும் 4 பேர் கைதாகினர்!

 
மேற்கு வங்காள மாநிலத்தில் ரானாகட்டில் உள்ள கான்வென்ட் பள்ளி ஒன்றில் கடந்த மாதம் கொள்ளையடிக்க சென்ற ஒரு கும்பல் அங்கிருந்த வயதான கன்னியாஸ்திரி ஒருவரை கற்பழித்து விட்டு ஏராளமான பொருட்களையும் கொள்ளையடித்து சென்றது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சி.ஐ.டி போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேரை கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

மீதமுள்ளவர்களையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வங்காளதேசத்தை சேர்ந்தவர்களான இவர்களிடம் பாஸ்போர்ட்டு அல்லது விசா எதுவும் இல்லை. அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்ற சி.ஐ.டி. போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment