டெல்லி மேல்–சபையில் நில மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
5 திருத்தங்கள்
சில குறிப்பிட்ட பெரு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் திருத்தங்களை செய்துள்ளது. பா.ஜனதா அரசு 5 முக்கியமான திருத்தங்களை செய்துள்ளது. இதன் மூலம் நிலம் கையகப்படுத்த விவசாயிகளின் ஒப்புதல் தேவை இல்லை. நிறுவனங்களின் சமூக பொறுப்பு சம்பந்தமான பிரிவும் நீக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் எடுத்த நிலத்தை
பயன்படுத்தாவிட்டால் மீண்டும் அதை விவசாயிகளிடமே ஒப்படைக்கும் பிரிவையும் நீக்கிவிட்டனர். மத்திய அரசின் திருத்தம் நில கொள்ளையர்களுக்கு மட்டுமே உதவும். ஆனால் இவற்றை எல்லாம் கூறாமல் பிரதமர் நரேந்திரமோடியும், மத்திய மந்திரி நிதின் கட்காரியும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
அனுமதிக்க மாட்டோம்
இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டனர். இந்த மசோதாவை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. எக்காரணம் கொண்டும் பா.ஜனதா அரசின் நில மசோதாவை டெல்லி மேல்–சபையில் நிறைவேற்ற விட மாட்டோம். இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லும் பணியை காங்கிரஸ் செய்யும்.
0 கருத்துகள்:
Post a Comment