Search This Blog n

04 October 2014

குழந்தை மற்றும் தாய்யை காப்பாற்ற சென்ற இந்திய மாலுமி மாயம்

எர்ணாகுளம் கால்வாயில் தாய் மற்றும் மகனை காப்பாற்ற சென்ற இந்திய கடற்படை மாலுமி மாயமானார். அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எர்ணாகுளம் கால்வாயில் பாலத்தில் இருந்து பெண் ஒருவர் தனது 6 மாத மகனுடன் தற்கொலை செய்துக் கொள்ள குதித்தார். பெண் கால்வாய்க்குள் குதித்தை பாலத்தில் இருந்து பார்த்த இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சாரதாவின் மாலிமி விஷ்னு உன்னி(வயது 24) கால்வாயில் நீரோட்டம் அதிகரித்து காணப்பட்டபோதும் தனது பாதுகாப்பை பொருட்படுத்தாமல் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தார். அவர் உடனடியாக அந்த பெண் மற்றும் குழந்தையை காப்பாற்றி கரைக்கு கொண்டுவர முயற்சி செய்தார். அப்போது அவ்வழியாக வந்த கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் படகில் அவர்களை ஏற்றிவிட்டார். ஆனால் நீரோட்டம் அதிகரித்ததால் அவர் மாயமானார். மீட்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தை இறந்துவிட்டது. பெண்ணுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என்று பாதுகாப்பு துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாயமான மாலுமியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. கடற்படை குழுவும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. மாயமான மாலுமியின் சொந்த ஊர் கேரளா மாநிலம் பாலக்காடு என்று பாதுகாப்புபடை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment