Search This Blog n

05 November 2019

புறாவை துரத்திச் சென்று 100 அடிக் கிணற்றிற்குள் வீழ்ந்த சிறுவன்

புறாவை துரத்திச் சென்று 10-ம் வகுப்பு மாணவன் 100 அடி ஆழக் கிணற்றில் விழுந்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கூலித் தொழில் செய்து வரும் இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதில் உள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால், தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது புறா ஒன்று அந்த
 பகுதியில் வந்து அமர்ந்துள்ளது.
அப்போது அதனை பிடிக்க கார்த்திக் முயற்சிக்க அது பறந்து சென்றுள்ளது. இருப்பினும் அதனை விடக் கூடாது எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில், புறாவை கார்த்திக் துரத்தியுள்ளார். தனது முழுக் கவனமும் மேலே சென்று கொண்டிருந்த புறாவிடம் இருக்க, கீழே இருந்த கிணற்றை கவனிக்கத் தவறிய கார்த்திக் எதிர்பாராத விதமாக 
கிணற்றுக்குள் விழுந்தார்.
அது 100 அடி ஆழக் கிணறு என்பதனால் பதறி போன அவரது நண்பர்கள் உடனடியாக வீட்டிற்கும், தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு துறையினர், ஒரு மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு சிறுவனை உயிருடன் மீட்டனர். புறாவை துரத்திச் சென்று சிறுவன் 100 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் 
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

Post a Comment