தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 803 ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் உள்ளன. மதுவிலக்கை வலியுறுத்தி ஒரு பக்கம் குரல்கள் எழுந்தாலும், ‘டாஸ்மாக்’ கடைகளில் வழக்கமான நாட்களில்
சராசரியாக ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரைக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது ரேசன் கடைகள், சினிமா தியேட்டரில் வரிசையில் நிற்பது போல, ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி செல்வதை காண முடியும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.372 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ.304 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகின. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரூ.113 கோடி, 9-ந் தேதி(திங்கட்கிழமை) ரூ.108 கோடி, 10-ந் தேதி (தீபாவளி பண்டிகையன்று)ரூ.151 கோடி என மொத்தம் ரூ.372 கோடிக்கு மது வகைகள்
விற்பனையாகி உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.68 கோடி விற்பனை அதிகமாக நடந்துள்ளது. வழக்கம்போல் பிராந்தி மதுவகைகள் அதிகம் விற்று தீர்ந்துள்ளது. மழையால் பீருக்கு மவுசு குறைந்து போனது. இதனால் கடந்த ஆண்டை விட பீர் விற்பனை 10 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘டாஸ்மாக் மது கடைகளை போலவே ‘எலைட், தனியார் மதுபான பார்களிலும் மதுபிரியர்கள்
கூட்டம்அலைமோதியது.
0 கருத்துகள்:
Post a Comment