ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் மகளிர் சிறப்பு காவல் அதிகாரி ஒருவரின் மடியில், அங்குள்ள தலமைக்காவலர் ஒருவர் வேண்டும் என்றே மடியில் உட்கார்ந்து இருக்கும் படங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் அடங்கிய இரண்டு புகைப்படங்கள் வலம் வருகின்றன. இவை ராஜவுரி மாவட்டத்தில் உள்ள புதால் போலீஸ் நிலையத்தில் எடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. புகைப்படத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் உட்காரும் தலைமைக்காவலர் ஜாகீர் உசேன் என்பது அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவரை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.
மேற்கண்ட சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றதாக ராஜவூரி- பூஞ்ச் சரக துணை டிஐஜி ஏகே அத்ரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த படங்கள் வெளியான உடன், தலைமைக்கவலர் ஜாகீர் உசேன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், அவரை மாவட்ட போலீஸ் லைன்ஸ் பிரிவுக்கு பணியிடம் மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும்,
சம்பவம் குறித்து
விசரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பெண் போலீஸ் அதிகாரிக்கு எதிராகவும் உடைந்தையாக செயல்பட பிற போலீஸ் துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment