சொந்த நாட்டு மக்களையே கொலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார் என விக்கிலீக்ஸ் நிறுவனம் அசாஞ்ச் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்கா உட்பட பல நாட்டு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அசாஞ்ச், தற்போது லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தங்கள் நாட்டு மக்களையே கொல்ல உத்தரவிட்டிருப்பதன் மூலம் அமெரிக்க அரசியல் நடைமுறையை சிதைத்து விட்டார்.
இதுபோன்ற அரசுகள் மக்களை மதிக்காமல் செயல்படும்போதுதான், அவர்களின் ரகசியங்களை அம்பலப்படுத்த விக்கிலீக்ஸ் போன்ற அமைப்புகள் தேவைப்படுகின்றன.
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், உளவு பார்ப்பதற்காகவும் ஆள் இல்லாத விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பான விதிகளின் முழுவிவரங்களை வெளியிட அமெரிக்கா தயாரா?
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்து யாராவது எங்களுக்கு உதவ முன்வந்தால் வரவேற்போம். அவர்களின் பெயரை ரகசியமாக வைத்திருப்போம். அமெரிக்காவின் திரைமறைவு நடவடிக்கைகளை உலகுக்கு அம்பலப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment