ஜேர்மனியைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகை ஒருவர் ஆறாவது முறையாக மார்பகப் பெருக்க அறுவைசிகிச்சை செய்ய முயன்று உயிரை விட்டுள்ளார்.
ஜேர்மனியைச் சேர்ந்த கரோலின் வொஸ்னிட்ஸா, ஆபாசப் பட நடிகை ஆவார். 23 வயதான இவர் பல நீலப் படங்களில் நடித்துள்ளார்.
இவர் மார்பகங்களை பெரிதாக்குவதற்காக 5 முறை மார்பகப் பெருக்க அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.
இந்நிலையில் 6வது முறையாக மார்பில் அறுவை சிகிச்சை செய்ய முயன்ற போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டொக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சையின் போது கரோலினுக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்தே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழக்கக் காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹம்பர்க் நகர நீதிமன்றத்திலும் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
மேலும் கரோலின், பிக் பிரதர் நிகழ்ச்சியின் ஜேர்மனிப் பதிப்பில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment