பிச்சை எடுப்பதால் மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பாதித்து வந்த பெண்ணொருவர் கொழும்பு-நீர்கொழும்பு ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை கைது செயயும் போது இவரிடமிருந்து 1800 ரூபா வரை இருந்துள்ளது. இது அவர் ஒரு மணித்தியாலத்தில் பிச்சை எடுத்து உழைத்த பணமாகும் என ரயில் திணைக்கள ஊழியர்கள் கூறினர்.
இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர் களனி விஹாரையில் போயா தினத்தில் 9000 ரூபாவிற்கு மேல் சம்பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தனது வயிற்றுப்பகுதியிலுள்ள ஒரு கட்டியை காண்பித்து மக்களின் அனுதாபத்தை பெற்று பிச்சை எடுத்துவருவதாக அவர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
இந்த கட்டியை சிகிச்சையின் மூலம் அகற்றியிருக்கலாம் தானே என பொலிஸார் கேட்டபோது இந்த கட்டியை காண்பித்து பிச்சை எடுப்பதனால் தான் தனது பிள்ளைகளை படிக்கவைத்துக்கொண்டு செழிப்பான வாழ்வை நடத்தமுடிந்துள்ளது என தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment