புதிய தலைமைச் செயலக வளாகம் இந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தனது அனுமதியின்றி, தமிழக அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தை சிறப்பு மருத்துவ.தலைமைச் செயலக மாற்றம்: பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 பிப்ரவரி, 2013 - 12:09 ஜிஎம்டி Facebook Twitter பகிர்கநண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக .இந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தனது அனுமதியின்றி, தமிழக அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்ற எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகத்தினை முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி மருத்துவமனையாக மாற்ற அஇஅதிமுக அரசு முடிவெடுத்துவிட்டதாகக் கூறி வீரமணி என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுச்செய்திருக்கிறார். அம்மனு தீர்ப்பாயத்தின் சென்னைப் பிரிவின் முன் நிலுவையில் இருக்கிறது. ஆனால் ஓமந்தூரார் தோட்டத்திலிருந்து மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றத்தினையும் தலைமைச் செயலகத்தையும் மாற்றுவதென்ற அஇஅதிமுக அரசின் முடிவில் தலையிடமுடியாதென வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, கடந்த வாரம்தான் ஓமந்தூரார் வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவினை அரசு தொடங்கியது. இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சென்னைப் பிரிவு பசுமைத் தீர்ப்பாயத்தின் முன் வீரமணியின் மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சொக்கலிங்கம் மருத்துவமனையாக மாற்ற வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிக்கெதிரான மனு இன்னமும் நிலுவையில் இருக்கும்போது மருத்துவமனை தொடங்க அவ்வளவு அவசரம் காட்டவேண்டிய அவசியமென்ன என்ன என்று அரசைக் கடிந்துகொண்டார். மேலும் இது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டினை நாளைக்குள் தீர்ப்பாயத்தின் முன் தெரியப்படுத்தவேண்டுமெனவும் நீதிபதி சொக்கலிங்கம் உத்திரவிட்டார். மனையாக மாற்ற எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
05 February 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment