Search This Blog n

27 February 2013

மாணவி வழக்கு: சிங்கப்பூர் டொக்டர் சாட்சியம்,


டெல்லியில் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த மாணவியின் உடல் திசுக்களை ஆய்வு செய்த சிங்கப்பூர் சோதனைக்கூடத்தின் பெண் மருத்துவர் அஞ்சுலா தாமஸ், விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் சாட்சியமளித்தார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த டிசம்பர் 16ம் திகதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு முதலில் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் டிசம்பர் 29ம் திகதி இறந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் டெல்லி கொண்டு வரப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கை, தெற்கு டெல்லியில் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சாகேத் விரைவு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், சிங்கப்பூரில் மாணவியின் உடல் திசுக்களை ஆய்வு செய்த பார்க்வே சோதனைக்கூடத்தின் மருத்துவர் (பேதாலஜிஸ்ட்) அஞ்சுலா தாமஸ் செவ்வாய்க்கிழமை விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் சாட்சியம் அளித்தார். அதை விரைவு நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா பதிவு செய்தார்.,,,,,

0 கருத்துகள்:

Post a Comment