வீட்டுவேலைக்காக பிரித்தானியா சென்ற இந்திய பெண், அவரது எஜமானரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்தியாவை சேர்ந்த நான்கு குழந்தைகளின் தாயான 39 வயது பெண், பிரித்தானியாவில் பல்பொருள் அங்காடியின் மேலாளராக பணியாற்றிய அலீமுதின் முகமது என்பவரது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார். அப்பெண்ணிற்கு 34 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக அலீமுதின் முகமது வாக்களித்திருந்தார்.
துணி துவைத்தல், சமையல் உள்ளிட்ட வேலைகள் செய்ய பணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அலீமுதின் முகமதுவும் அவரது மனைவி ஷமீனா யூசுப்பும் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தினர்.
எஜமானி ஷமீனா யூசுப், இந்திய பெண்ணின் கைகளில் வெந்நீரை கொட்டியும், தலை உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வரும் அளவுக்கு தாக்கியும் சித்ரவதை செய்துள்ளார்.
அவருக்கு 1,700 ரூபாய் தான் சம்பளம் தரப்பட்டது. இது தொடர்பாக பிரித்தானியாவில் உள்ள பல்வேறு அமைப்புகளில் புகார் அளித்தும் அலீமுதின் தம்பதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒரு முறை தேநீர் கிண்ணத்தை வீசி காலில் காயம் ஏற்படுத்தியதற்காக ஷமீனா யூசுப் மீது அந்த பெண் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, ஷமீனா யூசுப் கைது செய்யப்பட்டார். எனினும் அந்த வழக்கு பின் கைவிடப்பட்டது.
பின்னர் அலீமுதின் முகமதின் தாய் நடத்தி வந்த கடையில் இந்திய பெண் வேலைக்கு சேர்ந்தார். அங்கும் அவருக்கு சித்ரவதை தொடர அத்துடன் அந்த கடையின் இன்னொரு முதலாளி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதன் பின் கண்ணாடி கடை நடத்தி வந்த சஷி ஓபராய் என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தார். அவரும், பேசிய சம்பளத்தை தராமல், அந்த பெண்ணை அடித்து சித்ரவதை செய்தார்.
புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களுக்கு உதவும் "கல்யாண்" என்ற அமைப்பு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, உதவ முன்வந்ததையடுத்து, அந்த பெண்ணை சித்ரவதை செய்த ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
0 கருத்துகள்:
Post a Comment