ஈரான், தன் சொந்த தயாரிப்பில் நவீன போர் விமானத்தை தயாரித்து கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஈரான் ஜனாதிபதி முகமது அஹ்மதி நிஜாத் பங்கேற்றார்.
கஹெர் 313 (Qaher 313) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், ஈரானின் இராணுவ சுயசார்பு நிலையைப் பறைசாற்றுவதாக அவர் தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு சர்வதேச அளவில் தடை இருக்கிறது.
இதனால், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் 30 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய விமானங்களையே ஈரான் பயன்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
Post a Comment