ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வினோதினியின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. |
ஒரு தலைக்காதலால் கடந்த ஆண்டு நவம்பரில் சுரேஷ் என்பவர் ஆசிட் ஊற்றியதில்,
வினோதியின் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று மாலை அவரது உடல் சொந்த ஊரான காரைக்காலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்படவுள்ளன. வினோதியின் மீது அமிலம் ஊற்றியது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் மீதான வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அவரது மரணம் புதுச்சேரி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரின் படத்துக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி மாணவ, மாணவிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஆசிட் வீச்சுப்போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர் |
0 கருத்துகள்:
Post a Comment