வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயற்சித்த இந்தியப் பிரஜையொருவர் நேற்று மாலை விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து 34 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் மற்றும் சிங்கப்பூர் டொலர் ஆகிய வெளிநாட்டு நாணயத்தாள்களை டுபாய்க்கு கொண்டு செல்ல முயன்ற 50 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment