Search This Blog n

28 February 2013

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ,,,


நாகலாந்து, திரிபுரா, மேகலாயா மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியாகி வருகின்றன.
நாகாலாந்து
நாகாலாந்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நாகா மக்கள் முன்னணி கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு கடந்த 23ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
இதில், இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 47 தொகுதிகளில் நாகா மக்கள் முன்னணி கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
5 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 4 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் 13 தொகுதிகளில் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
திரிபுரா
திரிபுராவில் ஆளும் இடதுசாரிகள் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
அதில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 44 இடங்களில் 32 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 5வது முறையாக ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது.
காங்கிரஸ் 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மேகாலயா
30 தொகுதிகளில் வெற்றி பெற்று மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
60 தொகுதிகள் உடைய மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இது கடந்த தேர்தலை விட 5 தொகுதிகள் அதிகமாகும்.
ஐக்கிய ஜனநாயகக் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் இக்கட்சி 3 தொகுதிகளை இழந்துள்ளது.இதர கட்சிகளும், சுயேட்சைகளும் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்,


0 கருத்துகள்:

Post a Comment