சிரியா ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கெதிராக நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர் பதவி விலகாததால் மக்களுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற கடந்த சில வாரங்களாக சண்டை நடந்து வந்ததில் சிரியா ராணுவம் ஏவுகணை வீசி தாக்கியதில் 19 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கவே அலெப்போவில் ராணுவத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அலெப்போ விமான நிலையம் கிளர்ச்சியாளர்கள் வசமாவதை தடுக்க கிழக்கு மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் அலெப்போவை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வான்வழி தாக்குதல்கள் மூலம் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது
0 கருத்துகள்:
Post a Comment