இந்தியாவின் லோக்சபை, ராஜ்யசபை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த இரண்டு சபைகளிலும் இலங்கையின் பிரச்சினையை முன்வைக்க தமிழகத்தின் அதிமுகவும், திமுகவும் தயாராகி வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அமெரிக்காவின் யோசனைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த இரண்டு கட்சிகளும் கீழ், மேல் சபைகளில் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் திமுக பிரதிநிதிகள், எம் கே ஸ்டாலின் தலைமையில், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு சென்று அமெரிக்க யோசனைக்கு ஆதரவு வழங்குமாறு கோரி வருகின்றனர்.
நேற்று அவர்கள் இத்தாலி, மலேசியா போன்ற தூதரகங்களுக்கு விஜயம் செய்து தமது கோரிக்கையை முன்வைத்தனர். அத்துடன் அவர்கள், அமெரிக்க மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகளையும் சந்தித்தனர்
0 கருத்துகள்:
Post a Comment