ஐதராபாத்தில் கடந்த வாரம் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு, ஸ்லிப்பர் செல்ஸ்களே காரணம் என்றும் 200க்கும் மேற்பட்டோர் ஊடுருவி உள்ளனர் என உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஐதராபாத்தில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தில்சுக் நகரில் கடந்த வாரம் தொடர்படியாக குண்டுகள் வெடித்து நாட்டை அச்சுறுத்தியது.
இதில் 17 பேர் பலியானார்கள், 130 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஐதராபாத்தில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் போலவே தற்போதைய குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த குண்டுகள் ஐதராபாத் நகரிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது 700 கிராம் அம்மோனியம் நைட்ரேட், மற்றும் ஜெலட்டின் குச்சிகளை வைத்து பந்து போல குண்டு தயாரித்து உள்ளனர்.
அதனை செப்புக் கம்பியால் சுற்றி அலுமினிய டப்பாவில் வைத்துள்ளனர். டப்பாவில் காலியாக உள்ள இடத்தில் இரும்பு குண்டுகள், மற்றும் இரும்புத் தட்டு துகள்கள் அடைத்து வைத்துள்ளனர். இவைகள் வெடித்தவுடன் மனித உடலுக்குள் புகுந்து சல்லடைகளாக துளைத்து விடுகிறது. இந்த வெடிகுண்டை டிஜிட்டல் சர்கியூட் மூலம் வெடிக்க செய்துள்ளனர்.,{புகைபடங்கள்}
மேற்கண்ட தகவல்கள் தேசிய புலனாய்வு பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெடிகுண்டு சிதறல்கள் கிடந்த துணியில் உருது எழுத்து உள்ளதாகவும், அந்த துணி நார்நாராக கிழிந்து போனதால் அதுபற்றி முழு விவரங்கள் சேகரிக்க முடியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு சதி இருந்துள்ளது உறுதியாகி உள்ளதாகவும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி இது போன்ற சதிசெயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது,
0 கருத்துகள்:
Post a Comment