இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் நோக்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்கின்றனர். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை கண்டித்து தனது தலைமையில் பெப்ரவரி 8-ம் திகதி டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஆ.பாஸ்கரசேதுபதி தலைமையில் சீருடை அணிந்த தொண்டரணியினர் 100 பேர் டில்லி பயணமாகியுள்ளனர். இன்று காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட சம்பர்க்க கிராந்தி எக்ஸ்பிரஸ் புகையிரதத்தின் மூலம் அவர்கள் டில்லி நோக்கி பயணமாகியுள்ளனர். அவர்களை வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோர் வழியனுப்பி வைத்ததாகவும் மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
05 February 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment