இலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புத திருத்தலங்களில் ஒன்று கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில். யாழ்ப்பாணத்தில் அமையப் பெற்று உள்ளது.
கீரி முகம் பெற்று இருந்த முனிவர் ஒருவர் இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி கீரி முகம் நீங்கப் பெற்றமையால் இத்தலத்துக்கு கீரிமலை என்று பெயர் வந்து உள்ளது என்பது ஐதீகம். நளன், அருச்சுனன், முசுகுந்தன் போன்றோரால் இக்கோவில் வழிபட பெற்று இருக்கின்றது என நம்பப்படுகின்றது.
தீர்த்த-தல யாத்திரைக்கு உரிய புராதன புண்ணிய தலங்களில் இதுவும் ஒன்று.
யாழ்ப்பாண இந்துக்களின் வாழ்க்கை நெறியில் கீரிமலை சிவன் கோவிலுக்கு தனி முக்கியத்துவம் உள்ளது. இறந்தவர்களின் சாம்பலை கொண்டு வந்து இங்கு உள்ள தீர்த்தத்தில் இந்துக்கள் கரைப்பார்கள். அதே போல ஆடி அமாவாசை போன்ற தினங்களில் இங்கு நீராடி பிதிர்க்களை வழிபடுவார்கள்.
போருக்கு பிந்திய இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் விரும்பி வருகின்ற இடங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது.
சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கீரிமலைக் கடலில் நீராடி மகிழ்கின்றனர். அத்துடன் இச்சுற்றாடலை புகைப்படங்களாக எடுத்தும் கொள்கின்றனர்.கீரிமலை கோவில், சிலைகள் மற்றும் கடல் ஆகியன இவர்களை வெகுவாக கவர்ந்து இருக்கின்றன[புகைபடங்கள் ]
.