நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் வைத்து, இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷை சந்தித்த வேளையில் அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையின் யுத்ததுக்கு பின்னரான நிலைமைகள் குறித்து ஜீ.எல்.பீரிஷ் பான் கீ மூனிடம் விளக்கமளித்துள்ளார்.
இதன் போது ,பான் கீ மூன், இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு மேற்கொள்கின்ற முன்னெடுப்புகள் தொடர்பில் அவதானித்து வருவதாக தெரிவித்தார்.
அத்துடன் மீள்குடியேற்றம் மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபை அவதானிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வினை மேலும் தாமதிக்காமல் உடனடியாக முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

0 கருத்துகள்:
Post a Comment