01.10.2012.By.Rajah.அமெரிக்காவில் டுவிட்டர்
மற்றும் யூடியூப் இணையத்தில் வாலிபர் ஒருவர், தற்கொலை செய்து கொள்ளும் காட்சி
நேரடியாக ஒளிபரபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சாலையில் அனாதையாக நின்றிருந்த காரை கடத்தி,
175 கிலோ மீற்றர் வேகத்தில் வாலிபர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளார். அரிசோனா பாலைவன பகுதிக்கு சென்ற நபர், காரிலிருந்து இறங்கி தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தன்னை தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டார். இக்காட்சியை டுவிட்டர் மற்றும் யூடியூப் இணையத்தளங்கள் நேரடியாக ஒளிபரப்பியதை லட்சக்கணக்கான மக்கள் நேரில் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்ததால், நேரடியாக ஒளிபரப்பியதற்காக யூடியூப் இணையத்தளத்தின் செய்தி வர்ணனையாளர் ஷெபர்டு ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ளார். |
முகப்பு |
0 கருத்துகள்:
Post a Comment