Tuesday 09 October2012 .By.Rajah.நியூகேசில்அணிக்குஎதிரானபிரிமியர்லீக்கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. மான்செஸ்டர் நகரில் நடந்த லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், நியூகேசில் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் டாட்டன்ஹாம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை தோற்கடித்தது. லிவர்பூல்-ஸ்டோக் (0-0), சவுத்தாம்டன்-புல்ஹாம் (2-2) அணிகள் மோதிய போட்டிகள் "டிரா'வில் முடிந்தன.
இதுவரை விளையாடிய 7 லீக் போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி உட்பட 15 புள்ளிகள் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் 19 புள்ளிகளுடன் செல்சியா அணி உள்ளது. மான்செஸ்டர் சிட்டி (15 புள்ளி), எவர்டன் (14) அணிகள் 3, 4வது இடங்களில் உள்ளன.
0 கருத்துகள்:
Post a Comment