Search This Blog n

18 October 2012

தமிழர் நிலங்களில் ராணுவத்தின் நிரந்தர

          
Thursday 18 October 2012 By.R.ajah. தளங்கள் குறித்து சீன தூதரக அதிகாரிகளிடம் கவலை தெரிவித்த த.தே.கூ.
வடக்கில் இராணுவம் நிரந்தரத் தளங்களை அமைப்பதற்கு சீனா உதவிகளை வழங்கி வருவது குறித்து கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள சீனத் தூதரக அதிகாரிகளை சந்தித்து, வடக்கில் இராணுவத்துக்கு சீனா உதவுவது குறித்து தமது கட்சி கவலை வெளியிட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினால் அமைக்கப்படும் நிரந்தர படைக் கட்டுமானங்கள் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களிலேயே அமைக்கப்படுகின்றன என்று சீனத் தூதரக அதிகாரிகளிடம் எடுத்து விளக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்குமான பாரிய குடியிருப்புக் கட்டமைப்புகளை வடக்கில் அமைப்பதற்கு சீனா உதவிகளை வழங்கி வருகிறது.

இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை சீனத் தரப்புக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தேவைகளையும் கூட சீனா கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment