| இந்தோனேஷிய பெண்கள்
விற்பனைக்கு உள்ளனர் என்று மலேசிய இணையத்தளத்தில் வெளியான விளம்பரத்தால் சர்ச்சை
ஏற்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள்
மலேசியாவில் வீட்டு வேலை செய்கின்றனர். இவர்கள் தங்கள் முதலாளிகளால் பெரும் கொடுமைகளுக்கு ஆளாவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த சிலர் இணையத்தளத்தில், வீட்டு வேலை செய்யும் இந்தோனேஷிய பெண்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளனர். 60 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும், நீங்கள் சமைக்க வேண்டியதில்லை, வேலை ஏதும் செய்யாமல் ஓய்வெடுக்கலாம் என்ற வாசகம் அடங்கிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இதற்கு இந்தோனேஷிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மலேசியாவில் உள்ள இந்தோனேசிய தூதர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியத்தை சந்தித்து சர்ச்சைக்குரிய வகையில் விளம்பரம் வெளியிட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். |








0 கருத்துகள்:
Post a Comment