Wednesday17October2012By.Rajah. பிடிவாரன்டரத்துஆகுமா?நாளை பரபரப்பு தீர்ப்பு சூளைமேட்டில் 1986ல் நடந்த துப்பாக்கியால் சுடு சம்பவம் தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் நேரில் ஆஜராகாததால் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதை ரத்து செய்யக்கோரிஅவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ராஜகோபாலன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு வக்கீல் பிரபாவதி ஆஜராகி, பிடிவாரன்டை ரத்து செய்ய கோரும்போது குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவருக்கு தமிழக போலீசார் உரிய பாதுகாப்பு வழங்குவார்கள். நீதிமன்றத்தில் ஆஜரானால்தான் சாட்சிகளால் அவரை அடையாளம் காட்ட முடியும்’’ என்று வாதிட்டார். அப்போது டக்ளஸ் தேவானந்தா சார்பில் வக்கீல் பி.என்.பிரகாஷ், ‘டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக உள்ளார். அவரை அடையாளம் காட்ட வேண்டும் என்று போலீசார் கோர முடியாது’ என்றார்.
இதற்கு அரசு வக்கீல் பதிலளிக்கும்போது, ‘குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்றமும் அடையாளம் காண வேண்டும். விசாரணை அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அடையாள அணிவகுப்பு முக்கியமாகும்’ என்றார். பி.என்.பிரகாஷ், ‘தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிந்ததும்தான் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்றார்’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி, பிடிவாரன்டை ரத்து செய்யக் கோரும் மனு மீதும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக கோரிய மனு மீதும் வரும் 18ம் தேதி (நாளை) தீர்ப்பளிக்கப்படும் என்று உத்தரவிட்டார்
0 கருத்துகள்:
Post a Comment