.
இருந்ததாகமறைந்தநடிகைஹேமாஸ்ரீ பேசிய சிடியால் பரபரப்பு கன்னட நடிகை, ஹேமாஸ்ரீயின் சாவுக்கு, அவரது பெற்றோரும், கணவருமே காரணம்,'' என, இவ்வழக்கில், முக்கிய சாட்சியாக கருதப்படும், ஹேமாஸ்ரீயின் கணவர், சுரேந்திர பாபுவின் நண்பரான முரளி கூறினார்.கன்னட திரைப்பட மற்றும், "டிவி' நடிகை ஹேமாஸ்ரீ. பெங்களூரு, பனசங்கரி பகுதியில் வசித்து வந்த அவர், தன் வீட்டின் அருகில் வசித்த, மஞ்சுநாத்துடன், "பழகி' வந்தார்.
மர்மசாவு:ஆனால், ஹேமாஸ்ரீயை, அவரது தாயார் கட்டாயப்படுத்தி, சுரேந்திரபாபு என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். கடந்த வாரம் செவ்வாயன்று, ஹேமாஸ்ரீ மர்மமான முறையில் இறந்தார்.இவ்வழக்கை விசாரித்து வரும் போலீசாரிடம், ஹேமாஸ்ரீயின், "நண்பரான' மஞ்சுநாத், சமீபத்தில், "சிடி' ஒன்றை கொடுத்தார். அந்த, "சிடி'யில், தன் தாயாருக்கும், கணவர் சுரேந்திர பாபுவுக்கு தவறான உறவு இருந்ததாக, ஹேமாஸ்ரீ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில், முக்கிய சாட்சியாகக் கருதப்படும், ஹேமாஸ்ரீயின் கணவர் சுரேந்திர பாபுவின் நண்பரும், ஆந்திராவை சேர்ந்தவருமான, முரளி, அனந்தபூரில் நிருபர்களிடம் கூறியதாவது:உறக்க நிலைகடந்த, 9ம் தேதி, மதியம், 1:45 மணிக்கு, பெங்களூரில் உள்ள, ஹேமாஸ்ரீ வீட்டுக்கு சென்றேன். அப்போது ஹேமாஸ்ரீ, அவரது அறையில் உறக்க நிலையில் இருந்தார்.அவரது வாயில் போதை மருந்தை, சுரேந்திரபாபு ஊற்றிக் கொண்டிருந்தார். இதற்கு, ஹேமாஸ்ரீயின் தாயாரும் உதவி செய்தார்.
அதிர்ச்சியடைந்த நான், யாரிடமும் சொல்லாமல், உடன், அனந்தபூருக்கு திரும்பி விட்டேன். அன்றிரவு, 8:00 மணிக்கு, அனந்தப்பூரில் உள்ள, என் பண்ணை வீட்டுக்கு, சுரேந்திரபாபுவின் கார் வந்தது. என் வீட்டில் வேலை பார்க்கும் பெண், கேட்டை திறந்து விட்டார். சுரேந்திரபாபுவும், அவரது டிரைவர் சதீஷும், ஹேமாஸ்ரீயின் உடலை தூக்கி வந்தனர்.சுரேந்திர பாபுவிடம் கேட்ட போது, ஹேமாஸ்ரீ போதையில் இருப்பதாக கூறினார். ஆனால், ஹேமாஸ்ரீ இறந்து விட்டதாக எனக்கு தெரிந்தது. ஹேமாஸ்ரீ உடலுடன் வெளியே செல்லும்படி, கோபத்துடன் கூறினேன். அவர், காலையில் செல்வதாகக் கூறினார். அவரது டிரைவர் சதீஷ் ஓடி விட்டார்.
மறு நாள் காலை, 8:00 மணிக்கு, சுரேந்திரபாபு தன் காரின் பின் சீட்டில் ஹேமாஸ்ரீ உடலை வைத்துக் கொண்டு, தானே காரை ஓட்டி சென்றார். ஹேமாஸ்ரீ சாவுக்கு சுரேந்திபாபுவும், அவரது பெற்றோருமே காரணம். இவ்வாறு முரளி கூறினார்.இதற்கிடையில், கொலை செய் யப்பட்ட கன்னட நடிகை, ஹேமாஸ்ரீயின் சகோதரி ரூபா நிருபர்களிடம் கூறியதாவது:என் பெற்றோர், தங்கள் சக்தியை மீறி என்னையும், ஹேமாஸ்ரீயையும் வளர்த்தனர். நன்கு படிக்க வைத்தனர். நடனம், சங்கீத வகுப்புகளில் சேர்த்தனர். தவறான வழிக்கு செல்ல விடாமல் பாதுகாத்தனர்.
பணம் பெறவில்லை:சுரேந்திர பாபுவுக்கு, ஹேமாஸ்ரீயை திருமணம் செய்து கொடுக்க, பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறுவது உண்மைக்கு புறம்பானது. ஹேமாஸ்ரீயின் ஒப்புதலுடன் தான், திருப்பதியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், இருவரும் சந்தோஷமாக இருந்தனர்.தற்போதைய சூழ்நிலையில், ஒரு "சிடி'யை வெளியிட்டு, என் குடும்பத்தை அவமதித்து வருகின்ற னர். இதனால், விசாரணைக்கு எந்த பயனும் இல்லை. எங்கள் குடும்பத்தினர் அவமானமடைந்துள்ளனர்.
என் கணவர், சுங்க இலாகா துறையில் துணை கமிஷனராக உள்ளார். எனக்கு யாருடைய பணமும் தேவையில்லை. என் தந்தையும், தாயும் பொருளாதாரத்தில் நன்றாக உள்ளனர்."சிடி'யிலுள்ள அனைத்து தகவல்களும் உண்மைக்கு மாறானது. "சிடி'யில் பேசியிருப்பது ஹேமாஸ்ரீயின் குரல் அல்ல. ஹேமாஸ்ரீ சாவுக்கு, என் பெற்றோர் காரணமல்ல. போலீசார் தான், உண்மையை கண்டுபிடிக்கவேண்டும்.இவ்வாறு ரூபா கூறினார்
0 கருத்துகள்:
Post a Comment