வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
ரெஜினால்டு டேவிஸ்(வயது 78) என்பவர்
மீது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் 15 பெண்களை கற்பழித்ததாக குற்றச்சாட்டுகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன.
இக்குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்து
வருகின்றது. இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் என டேவிஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தற்போது குழந்தைகளாக இருக்கும் நான்கு பெண்களை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். கைத்தடி உதவியுடன் குற்றவாளிக் கூண்டுக்கு வந்த டேவிஸ், எல்லாமே பொய்யான குற்றச்சாட்டுகள். எதுவும் நடக்கவில்லை. அதில் எதுவும் உண்மையில்லை என்றார். இங்கிலாந்தின் முன்னாள் இராணுவ வீரரான டேவிஸ் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் |
0 கருத்துகள்:
Post a Comment