வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012,By.Rajah. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பற்றி
அவதூறாக பேசியதற்காக, எதிர்கட்சி வேட்பாளரான மிட்ரோம்னியின் மகன் மன்னிப்பு
கோரினார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்வரும் நவம்பர்
மாதம் 6ம் திகதி நடைபெற உள்ளது. கடந்த 16ம் திகதி நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த இரண்டாவது விவாதத்தின் போது, ஜனாதிபதி ஒபாமா- குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னி ஆகியோர் விவாதம் நடத்திய போது ரோம்னியை ஒபாமா தனது பேச்சினால் திணறடித்தார். இது குறித்து ரோம்னியின் மூத்த மகன் டாக் ரோம்னி வடக்கு கரோலினாவில் வானொலி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நான் அங்கு இருந்திருந்தால் ஒபாமாவிற்கு மூக்குடைத்தாற் போல் பதிலடி கொடுத்து நாற்காலியை ஆட்டம் காண வைத்திருப்பேன் என்றார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து டாக் ரோம்னி, ஒபாமாவிடம் மன்னிப்பு கோரினார். இது குறித்து டாக் ரோம்னி கூறுகையில், ஏதோ ஜோக் அடித்தேன் தவிர அப்படி ஒன்று தவறாக பேசவில்லை. தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் ஒபாமாவும் மன்னித்துவிட்டார் எனவும் கூறியுள்ளார். |
முகப்பு |
0 கருத்துகள்:
Post a Comment