லண்டனில் பிரதமர் டேவிட் கெமரூன் வீட்டுக்கு அருகில் உள்ள சாலையில் நிறுவப்பட்டுள்ள சிலை மீது நிர்வாணமாக வாலிபர் ஒருவர் அமர்ந்து கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்தும் இதனால் ஸ்தம்பித்தது.
மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு கீழே இறங்கி வந்த அந்நபரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மத்திய பகுதியில் உள்ளது வயிட்ஹோல் வீதி. மிக முக்கியமான இந்த சாலை அருகில்தான் பிரதமர் டேவிட் கெமரூனின் வீடு அமைந்துள்ள சாலையும் உள்ளது.
மேலும் பல்வேறு முக்கிய அலுவலகங்களும் இந்த சாலையில் உள்ளது. 19ம் நூற்றாண்டில் இந்த பகுதியின் இராணுவ தளபதியாக இருந்தவரும், கேம்பிரிட்ஜ் பகுதியை ஆட்சி செய்தவருமான பிரின்ஸ் ஜோர்ஜ் சிலை நிறுவப்பட்டுள்ளது. குதிரை மீது ஜோர்ஜ் செல்வது போன்ற சிலை, உயர்ந்த பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையின் மீது நேற்று பகல் 12 மணியளவில் ஒரு வாலிபர் நிர்வாணமாக சரசரவென ஏறினார். பின்னர் சிலையின் தலை மீது அமர்ந்து கொண்டார். கால்களை மாற்றி மாற்றி அவ்வப்போது பல்வேறு போஸ்களும் கொடுத்துள்ளார். இதனால் சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து வந்தனர். போக்குவரத்தை வேறு பாதையில் மாற்றி விட்டனர். கடும் பனியில் நிர்வாணமாக அந்நபர் உட்கார்ந்திருந்த ஸ்டைலை பார்த்து அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், அவருடன் பேச்சு கொடுத்தனர். அவர் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாக பொலிஸார் சந்தேகப்பட்டனர். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிற்பகல் 3 மணிக்கு அந்நபர் தானாகவே கீழே இறங்கி வந்தார். உடனே பொலிசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் வேனில் ஏற்றி சிறைக்கு கொண்டு சென்றனர்.
இதனால் பரபரப்பான லண்டன் சாலை 3 மணி நேரம் ஸ்தம்பித்தது. அவர் எதற்காக சிலை மீது ஏறினார், அவர் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை{புகைபடங்கள்},
0 கருத்துகள்:
Post a Comment