Search This Blog n

18 November 2012

மனித உரிமைகள் நான் தொடர்ந்து அவதானத்தை செலுத்தி?

           
 
By.Rajah.இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ள உள்ளக அறிக்கையை கனடா வரவேற்றுள்ளது.

இது தொடர்பில் கனடா வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவிக்கையில்,

'இலங்கை மக்கள் பலவருடங்களாக முகம்கொடுத்து வருகின்ற மனித உரிமை மீறல்களை இந்த அறிக்கை வெளிக்கொணர்ந்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான பொறுப்புகள் தொடர்பில் நான் தொடர்ந்து அவதானத்தை செலுத்தி வருகின்றேன்.

இந்த அறிக்கையானது இறுதி யுத்தத்தின்போது ஐ.நா.மற்றும் அதன் தொண்டு நிறுவனங்களின் இயலாமையை சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் இருக்கவும் எதிர்கால தோல்விகளை தடுப்பதற்கான எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் பரிந்துரைத்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment