By.Rajah.வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபைவளாகத்தில்நடைபெற்றகண்காட்சியில் ஒலிபெருக்கியினைநிறுத்துமாறுயாழ்நீதிமன்றத்தால் உத்தரவிட்டப்பட்டபோதும்அதனைப்பொருட்பாடுத்தாது கண்காட்சி நடைபெற்றுள்ளது.
நாளை யாழ்ப்பாணத்தில் நாடைபெறவுள்ள ஆளுனர் மாநாட்டைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபையினால் பல லட்சம் ரூபா செலவில் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது
இந்தக் கண்காட்சி நடைபெறும் வளாகத்திற்கு முன்னாள் யாழ் நீதிமன்றம் உள்ளதால் பலத்த சத்தத்துடன் கலை நிகழ்வுகள் நடைபெற்றது இதனை உடனடியாக நிறுத்துமாறு பதிவாளர் ஊடக யாழ் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இது தொடர்பாக நீதவானிடம் கதைக்குமாறு யாழ் மேயர் அனுப்பட்டு நிகழ்வு நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று காலை 9 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டடிருந்தபோதும் 2 மணித்தியாலம் ஆளுனரின் வருகைக்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் காத்துக்கிடந்தனர்.
இன்றைய தினம் மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய நாள் என்பதால் இதன் காரணமாகவே ஆளுனர் இரண்டு மணி நேரம் தாமதமாக வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விருந்தினர்களை அழைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணவர்களுக்கு எதுவித உணவோ குடிநீரோ வழங்காது 7.30 தொடக்கம் 11.00 மணிவரை வீதியில் காக்கவைக்கப்பட்டுள்ளதோடு அங்கு கடமையாற்றிய திணைக்கள உத்தியோகஸ்தர்களுக்கு பானம் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
Post a Comment