27 ம் திகதி மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நடாத்தவும் மணி அடிப்பதற்கும் யாழ். மாவட்டத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன் போது எதிர்வரும் 27 ம் திகதி இந்துக்களின் விழாவான காத்திகை விளக்கீடு கொண்டாடப்படவுள்ளது.
எனினும் அன்றைய தினம் மாவீரர் நாளாக அமைகின்றது. அதனால் விளக்கீட்டினைக் கொண்டாடுதற்கு யாழ். மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதா ? என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் போதே பொலிஸ் மா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
27 ம் திகதி ஆலயங்களில் விசேட வழிபாடுகள் எதுவும் நடத்தக் கூடாது என நாம் யாருக்கும் அறிவிக்கவில்லை. அவ்வாறு எங்களுக்கு செய்யவும் முடியாது. ஏனென்றால் விழாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மதத்தவர்களது பாரம்பரியம். அதனை நாம் தடுத்துவிட முடியாது.
மக்களது கலாச்சார நிகழ்வுகளுக்கு நாங்கள் தடையில்லை. அன்றைய நாள் எங்கள் சமயப்படி பௌர்ணமி தினம் நாமும் அதனை அனுஷ்டிப்போம்.
அன்றைய தினம் ஆலங்களில் விசேட பூஜைகளும், மணி ஒலிக்கவும் மக்களுக்கு உரிமையுண்டு என்றார்.
இதேவேளை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து இம்முறை கார்த்திகை 27 ம் திகதியில் தீபத் திருநாளை கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:
Post a Comment