Search This Blog n

25 November 2012

கிழக்கில் இன்று முதல் வரும் புதன்கிழமை வரை பொது நிகழ்வுகளுக்கு ?

 
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஞாற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 28 ம் திகதி வரையில் நடைபெறவுள்ள பொது நிகழ்வுகளுக்கு படையினர் தடைவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள படையினரின் இவ்வாறான செயலானது பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் குழப்பும் வகையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை ஏற்பாடுசெய்யப்பட்ட பொது நிகழ்வுகளை நிறுத்துமாறு குறித்த பகுதிகளில் உள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சிங்கள படையினர் அச்சுறுத்தியது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாவீரர் தினத்தை கருத்தில் கொண்டே இலங்கை படையினர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மனதில் நீங்காத நிலையையே ஏற்படுத்தும். மாவீரர் தினம் என்பது போரின்போது உயிரிழந்த போராளிகளை நினைவு கூருவதாகும்.
அவர்கள் வேறு யாரும் அல்ல எங்கள் உறவுகள். அவர்களை நினைவுகூரும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது.
அத்துடன் எதிர்வரும் கார்த்தினை 28 ஆம் திகதி இந்துக்களின் புனித தினமான கார்த்திகை விளக்கீடு இருக்கின்றது.
அதனை இந்துக்கள் வழிபாடு செய்யாமல் தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகவே பார்க்கப்படவேண்டும்.
அதுமட்டுமன்றி மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் வீடு வீடாகச் செல்கின்ற படையினர் குடும்ப விபரங்களைத் திரட்டுவதுடன், குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களை புகைப்படமும் எடுத்து வருவதாகவும் அந்த பகுதி மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக அரியநேந்திரன் கூறினார்.
சில குடும்பங்களில் கணவன்மார் வெளிநாடு சென்றுள்ளதால் மனைவியை மாத்திரம் வைத்து புடைப்படம் எடுக்கின்றனர்.
அத்துடன் பகல் வேளைகளில் வீடுகளுக்குச் செல்வதனால் கணவன் தொழிலுக்கும் பிள்ளைகள் பாடசாலைக்கும் சென்றுள்ள நிலையில், குடும்பப் பெண்ணை தனியாக வைத்து புகைப்படம் எடுப்பதால் அந்தப் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர்களின் அனுமதியின்றி குறித்த பிரதேச மக்களின் குடும்ப விபரங்களை படையினர் திரட்டி வருவது சம்பந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட ராணுவக் கட்டளைத் தளபதி ஆகியோரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முறையிட்டிருந்த நிலையில் மீண்டும் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இராணுவத்தினர் குடும்ப விபரங்களை எடுப்பது தங்களுக்கு தெரியாதெனவும், இனிமேல் இவ்வாறான விபரங்களை இராணுவத்தினர் சேகரிக்கும்போது மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மீண்டும் எதுவித அனுமதியுமின்றி யாருக்கும் தெரியாமல் சிங்கள படையினர் இவ்வாறான விபரங்களைத் திரட்டுவது மக்களுக்கு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு தொடர்பான விவாதத்தின் போது வெளிக்கொணரவுள்ளதாகவும்; அவர் குறிப்பிட்டார்

0 கருத்துகள்:

Post a Comment