இங்கிலாந்தில் மிக இளம் வயதிலேயே
சிறுவர்கள் பாலியல் குற்றவாளிகளாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 13 வயதுக்குட்பட்ட 7 பேர் வரை கற்பழிப்பு உள்ளிட்ட
குற்றங்களுக்காக கைதாகியுள்ளனராம். ஓன்லைன் மூலம் படங்களை பார்த்து இவர்கள் கெட்டுச் சீரழிவதாகவும், கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இணையத்தில் பாலியல் சம்பந்தமான தகவல்கள் அதிகளவு கிடைப்பதால், சிறுவர்கள் அதிகளவு கெட்டுப் போய் விடுகின்றனராம். இதுகுறித்து குழந்தைகளுக்கான இன்டர்நெட் பாதுகாப்பு கூட்டணி அமைப்பின் ஜான் கார் கூறுகையில், இளம் வயதிலேயே சிறுவர்கள் பாலியல் குற்றவாளிகளாக மாறி வருகின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையில் 10 வயது சிறுவன் பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி உள்ளான் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இணையத்தில் ஆபாச படம் பார்ப்பது உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார் |
0 கருத்துகள்:
Post a Comment