Search This Blog n

12 November 2012

15 மில்லியன் அமெரிக்க டாலர் - பணத்துக்கு என்ன நடந்தது!

       
By.Rajah.விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அவர்கள் வன்னிப் பெரு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும், அறிவிக்கப்படாத அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்தனர் என்பதும் பலராலும் அறியப்பட்ட விடையம். இதேவேளை அவர்கள் சுங்கத்துறை, வணிகப் பிரிவு, வருமாணப் பிரிவு, நீதித்துறை, பொலிஸ் பிரிவு என்று பல திணைக்களங்களை நடாத்தி வந்தனர்.
இதனுள் தமிழீழ வங்கியும் அடங்கும். வன்னியில் மட்டும் சுமார் 12 கிளைகளைக் கொண்டு இயங்கிவந்த தமிழீழ வங்கியில் சுமார் 10,000 பேர் வைப்பீடுகளைச் செய்துள்ளனர் என்றும், சேமிப்பு வங்கிக் கணக்கு போக சுமார் 300 கரன் எக்கவுண்டுகள் இருந்ததாகவும் அறியப்படுகிறது. கிளிநொச்சியில் உள்ள தமிழீழ வங்கி ஒன்றின் மனேஜராகப் பணியாற்றிய மகாலிங்கம் வீரதேவன் என்னும் நபர் சமீபத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மகாலிங்கம் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ வங்கியில் சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மதிப்பான ரூபாய்கள் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு வரும் பணத்தை, புலிகள் தமது தமிழீழ வங்கிக்கே மாற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனூடாகவே பெரும் பணம் இவ்வங்கியில் தேங்கியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது, புலிகள் வெல்லப்பட்டதும், பின்னர் அவர்களது நிர்வாக நகரமான கிளிநொச்சி இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தது. இதன் பின்னர் இப் பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று மாகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தமிழீழ வங்கி தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் பல தகவல்களைப் பெற்றுள்ளது. இதில் சில தகவல்கள் விக்கி லீக்ஸ் ஊடாகவும் கசிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

0 கருத்துகள்:

Post a Comment