Search This Blog n

13 November 2012

சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தின் இடிபாடுகள் இன்று ?

      By.Rajah.1998ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தின் இடிபாடுகள் இன்று மீட்கப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுளளது.
1998ம் ஆண்டு பலாலியிருந்து ரத்மலானை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த விமானமே புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த விமானம் மன்னார் கடற்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டபோது கடலில் மூழ்கியது.
விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் நடத்திய விசாரணைகளுக்கு அமைய இந்த விமானத்தை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விமானத்தின் இடிபாடுகளையும் மீட்கும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தபோதிலும், அப்பணிகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த விமான விபத்தில் 48 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

Post a Comment