By.Rajah.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றிற்கும், உலக சமூகத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யுரைத்து வருகின்றது. 13ம் திருத்தச் சட்டத்தை வேண்டுமெனக் கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் இதனை கடுமையாக எதிர்த்து வந்தது.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே. அனைவருக்கும் ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்மைகளை அளிக்க முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இன்று துரித அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:
Post a Comment