Search This Blog n

28 November 2012

இன்று மாவீரர் நாள் 27 /11 /2012

தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்ச்சியத்தை உயிர் மூச்சாய் கொண்டு களமாடி வித்தாகி போன எங்கள் காவல் தெய்வங்களை நெஞ்சங்களில் நிறுத்தி பூசிக்கும் நாள்தமிழினத்திற்கு என்று அடையாளம் தந்து உறங்கி கொண்டிருக்கும் புனிதர்களின் நாள்.அடக்கு முறைக்கு எதிராக ஆயிரம் ஆயிராமாய் வெகுண்டெழுந்து ஆலமரமாய் எங்கள் நெஞ்சங்களில் இருக்கும் ஆத்மாக்களின் நாள்.காடு மலை மேடு பள்ளம் புயல் மழை என்று எல்லாவற்றையும் தாண்டி தமிழினத்திற்கு வெற்றி தேடி தந்த எங்கள் கண்மணிகளின் நாள்.
தங்கள் ஆசைகள் கனவுகள் எல்லாம் சுதந்திர தமிழ் ஈழமே என்ற உன்னதமான கனவுகளுடன் உறங்கிப்போன எமது தேசப்புதல்வர்களின் நாள்.இந்த உன்னத மான புனிதமான நாளிலே அந்த மாவீரர்களை எமக்குள் நிறுத்தி தமிழ் இனத்தின் விடுதலையை அவர்களின் காலடியில் சமர்ப்பிக்க மீண்டும் ஒருமுறை உறுதி எடுத்து கொள்வோம்.{காணொளி,}


0 கருத்துகள்:

Post a Comment