By.Rajah.பிரான்ஸ் வர்டமான் பிரதேசத்தில் இருந்தே பரிதியைக் கொல்லச் சொல்லி கட்டளை வந்தது எனச் சந்தேகிக்கிறது பிரெஞ்சுப் பொலிஸ் ! இதற்கான முழுமையான காரணத்தை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை இரவு பாரிசில் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட கேணல் றீகன் என்று அழைக்கப்படும் பரிதியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சுட்டுக்கொல்லவில்லை என்று பிரெஞ்சுப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அன்று இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில், பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் பரிதியின் மனைவியோ பிள்ளைகளோ அங்கே இருக்கவில்லை.
சந்திப்புகள் முடிந்த பின்னர் பரிதி உடபட 4 பேர் தமது வீட்டுக்குச் செல்ல புறப்பட்டுள்ளார்கள். கேணல் பரிதி பாரிஸ் நகரில் 2 முறை முன்னர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததால், அவர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும்வேளை, தமது அலுவலகத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியூடாக வெளி நடமாட்டத்தைக் கவனிப்பது வழக்கம்.
இதுபோல அவர் கவனித்துவிட்டுத் தான் வெளியே புறப்பட்டுள்ளார். இவர்கள் 4ல்வரும் பஸ் நிலையத்தை அண்மித்து அங்கே நின்றிருந்தவேளை, தமக்குப் பின்னல் இருந்த கண்ணாடி திடீரென உடைந்ததை பார்த்துள்ளார்கள். அடுத்தகணமே, ஓடுங்கள் யாரோ சுடுகிறார்கள் என்று, 4ல் வரில் ஒருவர் கத்தியுள்ளார்.
எனவே 4ல்வரும் ஓட ஆரம்பித்தவேளை, 2டாவது குண்டு கேணல் பரிதி மீது பாய்ந்துள்ளது. சுட்டவர் சற்றும் பயமில்லாது பரிதியின் அருகே வந்து 3 முறையும் சுட்டுவிட்டு அங்கிருந்து நடந்து சென்றுள்ளார். சிறிது தூரத்துக்கு அப்பால் நின்றிருந்த காரில் ஏறி அவர் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் பாவித்த துப்பாக்கி 9MM என்று அழைக்கப்படும், கைத்துப்பாக்கி ஆகும்.

இதில் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்ததா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. முதலில் மோட்டார் சைக்கிளில் வந்தவர், கறுப்பு கவசம் அணிந்திருந்தார் என்றும், அவரே சுட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. குறிப்பிட்ட சமயம், அவ்வளியே ஒரு மோட்டார் சைக்கிள் சென்றுள்ளது அவ்வளவு தான். ஆனால் கேணல் பரிதியை சுடும்போது அவர் அருகில் நின்ற 3 பேரில் ஒருவரின் வாக்கு மூலத்துக்கு அமையவே இச் செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
மூன்று 9MM ரக துப்பாக்கியின் வெற்றுத் தோட்டாக்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு வயது 33 என்றும் மற்றவர் பெயர் மற்றும் வயதைக் குறிப்பிடவில்லை. இதேவேளை கைதாகியுள்ள சந்தேக நபர் ஒருவர் தாம் 50,000 ஆயிரம் யூரோக்களை வாங்கிக்கொண்டு தான் இக் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இது ஒரு செய்தியாக வெளிவந்துள்ளதே தவிர, பொலிசார் இதுகுறித்து எவ்வித தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை. குறிப்பிட்ட பிரெஞ்சு ஊடகம் ஒன்று மட்டுமே இவ்வாறு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும். மேற்படி இப் பத்திரிகை வெளியிட்ட செய்தி. இதேவேளை குற்றவாளி என்ற சந்தேகத்தில் கைதாகியுள்ள இருவரும் தாம் அக் குற்றத்தைச் செய்யவில்லை என்று மறுத்திருக்கிறார்கள். சிலவிடையங்களை நாம் மனதில் நிறுத்திக்கொள்வது நல்லது. அதாவது கைதுசெய்யப்பட்டுள்ள 2வருமே சந்தேகத்தின் அடிப்படையில் கைதானவர்களே ஒளிய அவர்கள் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம் இதுவரை நிருபனமாகவில்லை. எனவே எவரையும் நாம் குற்றவாளி என்று கூறிவிடமுடியாது.
பொலிசார் தகுந்த ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடித்து, வெற்றுத் துப்பாக்கி ரவைகளில் உள்ள கைரேகை அடையாளங்களைப் பாவித்து இல்லையேல் வெறு முறையில் தடையங்களைக் கண்டுபிடித்து குற்றவாளி இவர்தான் என்று நிரூபிக்கவேண்டும். இதனை நீதிமன்றம் சரியாக விசாரித்து, தீர்ப்பு வழங்கும் பட்சத்திலேயே அவர் குற்றவாளியாகிறார். அதற்கு முன்னர் நாம் ஊகங்களிலும் அனுமாணங்களிலும் பேசமுடியாது

0 கருத்துகள்:
Post a Comment