Search This Blog n

20 November 2012

பிரபாகரனின் மகனை கொல்வதற்கு எந்த அவசியமும் எமக்கு இல்லை:

 
பிரபாகரனின் மகனை படுகொலை செய்வதற்கான தேவை எமக்கு இருக்கவில்லை. அவரை நாம் கொல்லவும் இல்லை. ஆனால் அவர் மோதல்களின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் டிலான் பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிள்ளையான் எந்த அடிப்படையில் ஜனாதிபதியின் ஆலோசகரானார் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அவர் அவ்வாறான பதவியை வகிப்பதற்கு சகல தகுதிகளையும் பெற்றிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

'கே.பி. குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கள் அனைத்தும் அவரை ஏன் கொலை செய்யவில்லை என்றே அமைந்திருக்கின்றன. இப்படியிருக்கையில் பிரபாகரனின் மகனை ஏன் கொன்றீர்கள் என மங்கள சமரவீர எம்.பி. கேள்வி எழுப்புகிறார்.

பிரபாகரனின் மகனையோ வேறு யாரையோ நாம் கொலை செய்யவில்லை. ஆனால் மோதல்களின்போது அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் பொதுமக்கள், மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என சகலரையும் கொலை செய்தனர். இது குறித்துப் பேசுவதற்கு இங்கு யாரும் கிடையாது.
ஜே.வி.பி.யினரும் ஆயுதப் போராட்டங்களை நடத்தியவர்களே. எனினும் அவர்கள் பாராளுமன்றத்துக்குள் வந்துள்ளதன் பின்னணியில் அவர்களின் ஜனநாயகப் பிரவேசத்தை நாம் வரவேற்கிறோம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணாவாக இருந்த பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் போராளியாக இருந்த முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் போன்றோரும் இவ்வாறு ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயகத்துக்குத் திரும்பினர். ஆயுதங்களைக் களைந்து ஜனநாயகத்துக்குள் நுழைபவர்களை நாம் ஏற்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment