பாகிஸ்தானின்
அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்தாண்டு மே
மாதம் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவுக்கு ஒசாமா பின்லேடன் பற்றிய தகவலை பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவர்
ஷகீல் அப்ரிடி தான் தெரிவித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில், ஷகீல் அப்ரிடிக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பெஷாவரிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் அப்ரிடி சிறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி அப்ரிடி உண்ணாவிரதம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது போராட்டத்திற்கு அது காரணம் இல்லை என்றும், அவருடைய உறவினர்கள், வக்கீல்களை சந்திக்க அதிகாரிகள் தடைவிதித்திருப்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது |
0 கருத்துகள்:
Post a Comment