Search This Blog n

23 November 2012

புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை வழக்கிலிருந்து

        
 
சென்னைபாண்டிபஜாரில்கடந்த1982ல்விடுதலைப் புலிகளுக்கும், புளொட் இயக்கத்தினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று சென்னை அமர்வு நீதிமன்றில் சிபிசிஐடி பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், புளொட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன், ராகவன் எனப்படும் சிவகுமார் ஆகியோர் சுட்டதில் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன், முகுந்தன் எனப்படும் உமா மகேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, பிரபாகரன் மற்றும் சிவகுமாரை மாம்பலம் பொலிசார் கைது செய்து அவர்கள் மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், மே 23ம் திகதி சிவனேஷ்வரன் என்றழைக்கப்படும் நிரஞ்சன் சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டார். மே 25ம் திகதி கும்மிடிப் பூண்டி ரயில் நிலையத்தில் உமா மகேஸ்வரனை பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இவர்கள் மீதும் ஆயுத தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் பிணையில் வெளிவந்த இவர்கள் தலைமறைவானார்கள்.இந்த வழக்கு 7வது கூடுதல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
4 பேர் மீதும் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக வழக்கு விசாரணை நடந்து தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதன்போது, சிபிசிஐடி சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபாகரன் இலங்கையில் நடந்த போரில் கொல்லப்பட்டார். அவரது உடல் நந்திக்காடல் பகுதியில் 2009 மே 19ல் கண்டுபிடிக்கப்பட்டது என்று புதுடெல்லியில் உள்ள இன்டர்போல் உதவி இயக்குனர் தகவல் அனுப்பியுள்ளார்.
சிவகுமார் இந்தியாவைவிட்டு வெளியேறி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை. ஜோதீஸ்வரன், ஹாங்காங் நாட்டில் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
நிரஞ்சன் இறந்துவிட்டதாக சிபிசிஐடிக்கு தகவல் வந்துள்ளது. எனவே, இந்த வழக்கிலிருந்து பிரபாகரன், சிவகுமார், ஜோதீஸ்வரன், நிரஞ்சன் ஆகியோரை நீக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது

0 கருத்துகள்:

Post a Comment